பிழைப்பு தேடி வெளிமாநில மக்கள் தாராளமாக தமிழகத்தில் வேலை செய்யட்டும். ஆனால், ஓட்டு போட சொந்த ஊர்களுக்கு (மாநிலங்களுக்கு )செல்லட்டும் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளாா். 
பீகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த’ (SIR) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக வாக்காளர்களுக்கு படிவங்களை வழங்கிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (PLO), தற்போது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றமும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கும் சூழலை உருவாக்கக்கூடும் என்கிற காரணத்தால் இந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளுக்கு நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வேலைக்காக வரும் பிற மாநிலத்தவருக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், அவர்களுக்கு இங்கு வாக்குரிமை வழங்கப்படுவதை அவர் தமிழ்நாட்டின் அரசியல் உரிமை மீதான அத்துமீறல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் எப்போதுமே வெளிமாநிலத்தவரை வாழவைக்கும் தன்மையுடையது. ஆனால், தமிழ்நாட்டின் அரசியல் முடிவுகளை தீர்மானிக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கக் கூடாது என்றும் மன்சூர் அலிகான் வலியுறுத்தினார்.
இருமல் மருந்து விவகாரம்… உரிமையாளரின் 2.04 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி


