புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு 15 நாட்களில் வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில்,
உயிரிழந்த வாக்காளர்கள் – 26,95,672 பேர், இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் – 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் – 3,98,278 பேர் என மொத்தம் 97,37,831 பேர் நீக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர் இந்த அவகாசம் ஜனவரி 30 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் 16 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இவ்விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக வாக்காளர் அடையாள அட்டை எண் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அடுத்த கட்டமாக, 15 நாட்களுக்குள் அனைவருக்கும் வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் புதிதாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் கோரியவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு – புதிய திராவிட கழகம் தலைவர் எஸ். ராஜ்குமார்


