உத்திரபிரதேச மாநிலத்தில், ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி 3 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில், ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான பாக்கி (12), பிராச்சி (14), மற்றும் விஷிகா (16) என்ற 3 சிறுமிகள், இன்று அதிகாலை தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். அந்த சிறுமிகள் மூவரும் சகோதரிகள் ஆவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ‘கொரியன் லவ் கேம்’ என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளனர். அந்த ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாக இருந்த அவர்கள் இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் படிப்பை புறக்கணித்து உள்ளனா். இதனால் அந்த மூவரையும் அவா்களது பெற்றோா்கள் கண்டித்து வந்துள்ளனா்.
இந்நிலையில், இன்று அதிகாலை 2.15 மணியளவில் 3 சகோதரிகளும் தங்கள் வீட்டின் பால்கனியில் இருந்து கைகளைப் பிடித்துக் கொண்டு குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இதனையடுத்து சிறுமிகள் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. அதில் தங்கள் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு, தங்கள் விளையாட்டு நடவடிக்கைகளை விவரித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, அப்பா, நாங்கள் கொரிய மொழியை விட்டு வெளியேற முடியாது. கொரியன் மொழிதான் எங்கள் வாழ்க்கை. கொரியன் மொழிதான் எங்களுக்கு எல்லாமே. அதிலிருந்து எங்களைப் பிரிக்க முடியாது. நாங்கள் எங்கள் உயிரையே விட்டுவிடுவோம் என கூறியதாக அந்த சிறுமிகளின் தந்தை கூறினார்.
தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20,000 இழந்த இளைஞர் தற்கொலை


