spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதேசப் பாதுகாப்பு குறித்து பேச பிரதமருக்கு சங்கடம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேசப் பாதுகாப்பு குறித்து பேச பிரதமருக்கு சங்கடம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

-

- Advertisement -

தேசப் பாதுகாப்பு குறித்து பேச பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் சங்கடம் ஏற்படுத்துவதாலேயே தன்னை பேச அனுமதிக்க மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளாா்.தேசப் பாதுகாப்பு குறித்து பேச பிரதமருக்கு சங்கடம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்காக மக்களவை கூடிய நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்களின் அமளியால் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோதும், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவையில் இல்லை. இதனை சுட்டிக்காட்டி பேச முயன்ற ராகுல் காந்திக்கு, ஆளும் கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து குறுக்கீடு செய்ததால் அவையில் காரசார மோதல் ஏற்பட்டது.

we-r-hiring

இதையடுத்து பேசிய ராகுல் காந்தி, “தேசிய பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான விவகாரத்தை கடந்த இரண்டு, மூன்று மணி நேரமாக எழுப்ப முயற்சிக்கிறேன். ஆனால் தொடர்ந்து தடுக்கப்படுகிறேன். முன்னாள் ராணுவ தளபதி எழுதிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகளை குறிப்பிடுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “நாட்டின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயம். அதைப் பற்றி பேசுவது பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் என்னை பேச விடாமல் தடுக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையில் சங்கடம் இல்லையென்றால் என்னை பேச அனுமதித்திருக்க வேண்டும்” என்றும் ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தி பேச முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ ஆட்சேபனை தெரிவித்தார். இதனால், ராகுலை பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியினரும் முழக்கம் எழுப்பியதால் அவையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

தொடர்ந்து ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதால், மக்களவையில் நீண்ட நேரம் கடும் வாக்குவாதமும் குழப்பமும் நிலவியது.

இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்.பி.க்கள் செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி

MUST READ