கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோட்டயம், இடுக்கி, மலப்புரம் உள்பட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.


கோட்டயம் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இங்கு நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கடந்த 3 நாளில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 7 பேரை காணவில்லை. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம் தவிர 12 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
“சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பதே ஆளுங்கட்சிக்கு நன்மதிப்பு!” — திருமாவளவன் வலியுறுத்தல்
