Homeசெய்திகள்இந்தியாஎன்.டி.ஏ (NTA) செயல்பாடுகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே நேரில் ஆய்வு செய்யத் திட்டம்: நீட் தேர்வு...

என்.டி.ஏ (NTA) செயல்பாடுகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே நேரில் ஆய்வு செய்யத் திட்டம்: நீட் தேர்வு முறைகேடுகள் வழக்கில் அதிரடி உத்தரவு!

-

- Advertisement -

நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை நடத்தி வரும் தேசிய தேர்வு முகமையின் (NTA) செயல்பாடுகள் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அந்த அமைப்பின் அலுவலகத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே நேரில் சென்று ஆய்வு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 18) நீதிபதிகள் அமர்வு முன்பு தீவிரமாக நடைபெற்றது.என்.டி.ஏ (NTA) செயல்பாடுகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே நேரில் ஆய்வு செய்யத் திட்டம்: நீட் தேர்வு முறைகேடுகள் வழக்கில் அதிரடி உத்தரவு!

நீட் தேர்வு முறைகேடுகளும் மாணவர்களின் போராட்டமும்
மத்திய அரசால் அமைக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பான தேசிய தேர்வு முகமை (NTA) கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. குறிப்பாக, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளால் நாட்டின் பல லட்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரத்தைக் கண்டித்து கடந்த ஜூன் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் திரண்டு நடத்திய மாபெரும் போராட்டம் மத்திய அரசை உலுக்கியது.

we-r-hiring

இந்தச் சூழலில், நீட் தேர்வில் தொடர்ச்சியாக நடக்கும் மோசடிகளுக்கு எதிராகவும், முறைகேடுகளைத் தவிர்க்கக் கணினி வழியிலான தேர்வுகளை நடத்த வலியுறுத்தியும் அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆரோதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

என்.டி.ஏ (NTA) செயல்பாடுகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே நேரில் ஆய்வு செய்யத் திட்டம்: நீட் தேர்வு முறைகேடுகள் வழக்கில் அதிரடி உத்தரவு!

மத்திய அரசு தரப்பு விளக்கம் மற்றும் நந்தன் நிலேகனி குழு
வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், “நீட் தேர்வில் தொடர்ச்சியாக நடைபெறும் மோசடிகளுக்கு எதிராக என்னென்ன சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன? அந்த மாற்றங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகின்றன?” எனத் தீவிரக் கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதிலளிக்கையில், “தேசிய தேர்வு முகமைக்காகத் தனி அலுவலகம் அமைக்கப்பட்டுவிட்டது. தேர்வு நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக இன்போசிஸ் நிறுவனத்தின் நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இக்குழு விரிவான ஆலோசனை நடத்தி இம்மாத இறுதிக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்” என்று தெரிவித்தார்.

என்.டி.ஏ (NTA) செயல்பாடுகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே நேரில் ஆய்வு செய்யத் திட்டம்: நீட் தேர்வு முறைகேடுகள் வழக்கில் அதிரடி உத்தரவு!

“நாங்களே நேரில் ஆய்வு செய்வோம்” – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி
மத்திய அரசின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், வெறும் காகித அளவிலான அறிக்கைகள் மட்டும் போதாது எனக் கண்டிப்புடன் தெரிவித்தனர். இதுகுறித்து நீதிபதிகள் உத்தரவிடுகையில், “தேசிய தேர்வு முகமைக்குத் தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்த அமைப்பு உண்மையில் இயங்குகிறதா? அது முறையாகச் செயல்படுகிறதா? அங்கு பணியாற்றும் ஊழியர்களின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நாங்களே நேரில் சென்று ஆய்வு செய்வோம். நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் வெறும் காகித அளவில் இருக்கக் கூடாது. அந்தக் குழுவின் தற்போதைய நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்”

என உத்தரவிட்டு, வழக்கினை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இந்த அதிரடி அறிவிப்பு கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் பெயருக்கே வந்த சோதனை! தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடிய மம்தா பானர்ஜி!

MUST READ