சரத்பவார் ராஜினாமா பின்னணியில் பிரசாந்த் கிஷோர்!

sa

மகராஷ்டிரா அரசியலின் மூத்த தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார்(82) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். 40 எம்.எல்.ஏக்களுடன் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதாக சொன்னதால்தான் சரத்பவார் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதே நேரம் சரத்பவார் ராஜினாமா பின்னணியில் பிரசாந்த் கிஷோர் இருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது.

இந்திய அரசியல்வாதிகளில் மூத்த தலைவரான சரத்பவார், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 முறை முதல்வராக இருந்தவர். காங்கிரஸிலிருந்து 1999 ஆம் ஆண்டில் பிரிந்தார். அவருடன் பிரிந்து வந்த பி.ஏ சங்மா உள்ளிட்டோருடன் இணைந்து தேசியவாத கட்சியை தொடங்கினர். அப்போது முதல் இப்போது வரைக்கும் கட்சியின் தலைவராக பதவி வைத்து வந்த சரத் பவர் திடீரென்று தலைவர் பதவியில் இருந்து விலகி இருப்பதால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்லாது மகாராஷ்டிரா அரசியலிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

sarath

மகாராஷ்டிரா அரசியலில் தேசிய வாத காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வைத்து வருகிறது. சிவசேனா தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்தார் சரத்பவார். சிவசேனா இரண்டாக உடைந்து ஆட்சியை பறிகொடுத்தார் உத்தவ் தாக்ரே. இதனால் சரத்பவாரை எதிர்த்து அஜித் பவார் கட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் பரவி வந்தன. அவர் சில எம்எல்ஏக்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பாஜகவுக்கு செல்ல இருப்பதாக பேச்சு எழுந்தது.

அஜித் பவரின் இந்த நடவடிக்கைக்கு காரணமே சரத்பவார் தான் என்று சொல்லப்படுகிறது. சரத்பவார் தனது மகள் சுப்ரியா சுலேவுக்கு கட்சியின் தலைமை பதவியை வழங்க முடிவு செய்திருந்தார். இதில் அதிருப்தி அடைந்துதான் அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 53 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜகவில் இணையப்போகிறார் என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. இது உண்மை இல்லை என்று அஜித் பவர் விளக்கம் அளித்து இருந்தாலும் அதன் காரணமாகத்தான் சரத்குமார் திடீரென்று தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது .

ப்

முன்னதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை வரவழைத்து மூன்று மணி நேரத்துக்கு மேலாக அவருடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார் . இந்த நிலையில் தான் இன்று தலைவர் பதவியில் இருந்து சரத்பவா ராஜினாமா செய்திருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களோ அவரின் ராஜினாமாவை ஏற்க மறுத்து சரத் பவார் தொடர்ந்து தலைவராக தொடர வேண்டும் என்று முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிராந்திய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார் சரத் பவர். இந்நிலையில் அஜித்பவார் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் சரத்பவார் ராஜினாமா செய்திருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Advertisement