spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ராகுல் காந்தியுடன் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் சிவராஜ்குமார்

ராகுல் காந்தியுடன் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் சிவராஜ்குமார்

-

- Advertisement -

ராகுல் காந்தியுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இன்று சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.‌

ராகுல் காந்தியுடன் பரப்பறையில் ஈடுபட்ட நடிகர் சிவராஜ்குமார்

we-r-hiring

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்று பிரச்சாரம் செய்தார். இவர் கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அறியப்பட்ட ராஜ்குமாரின் மகன் மற்றும் மறைந்த புனித் ராஜ்குமாரின் அண்ணன் ஆவார்.

கடந்த வாரம் சிவராஜ் குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருந்தார். சிவமோகா மாவட்டத்தில் உள்ள சொரபா தொகுதியில் கீதா சிவராஜ்குமாரின் அண்ணன் குமார் பங்காரப்பா பாஜக சட்டமன்ற உறுப்பினராக உள்ள நிலையில் அவரை எதிர்த்து குமார் பங்காரப்பாவின் தம்பி மது பங்காரப்பா காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக அதே தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.

ராகுல் காந்தியுடன் பரப்பறையில் ஈடுபட்ட நடிகர் சிவராஜ்குமார்

இன்று மது பங்காரப்பாவை ஆதரித்து ராகுல் காந்தி, சிவராஜ் குமார், கீதா சிவராஜ்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய சிவராஜ் குமார் அண்மையில் தனக்காக இல்லாமல் நாட்டை ஒற்றுமைப்படுத்த பாரத் ஜோடோ பாதயாத்திரையை ராகுல் காந்தி வெற்றிகரமாக நடத்தி நான்காயிரம் கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்டது மிகப்பெரிய ஈர்ப்பு சக்தியாக இருந்தது என புகழாரம் சூட்டினார்.

MUST READ