Homeசெய்திகள்விளையாட்டுபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

-

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 60 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 62வது லீக் போட்டி (அதாவது இரண்டாவது போட்டி) நடைபெறுகிறது. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 61வது லீக் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 5 வெற்றி 7 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலுள்ளது. டெல்லி அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 6 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு அணி 18 முறையும் டெல்லி அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. இந்த ஆட்டத்தை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் பிளே ஆப் சுற்றில் தகுதி பெற முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்‌ஷர் பட்டேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டூ பிளசிஸ்சும் விராட் கோலியும் களமிறங்கவுள்ளனர்.

 

MUST READ