Homeசெய்திகள்விளையாட்டுகுஜராத்தை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!

குஜராத்தை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!

-

 

குஜராத்தை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நேற்றைய போட்டியில் குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.

கில்லி படத்திற்கு கிடைத்த வரவேற்பு எதிர்பார்க்காதது… இயக்குநர் தரணி நெகிழ்ச்சி…

டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்தது. 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 220 ரன்களை மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 88, அக்சர் படேல் 66 ரன்களும், ராசிக் ஸலாம் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். குஜராத் அணி தரப்பில் சாய் சுதர்சன் 65, டேவிட் மில்லர் 55 ரன்களையும், சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு… கேரள காவல்துறை விசாரணை…

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று இரவு 07.30 மணிக்கு மோதுகின்றன.

MUST READ