Homeசெய்திகள்விளையாட்டுஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு – இந்தியா பதிலடி...

ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு – இந்தியா பதிலடி கொடுக்குமா?

-

- Advertisement -

ஓமனில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான்

இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பர்ஹான் யூசுப் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்கிறது.

பதிலடி கொடுக்குமா இந்தியா?

கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. மேலும், நடப்பு தொடரின் லீக் ஆட்டத்திலும் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது.

இந்தத் தோல்விகளுக்குப் பதிலடி கொடுத்து 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்திய இளம் வீரர்கள் களமிறங்கியுள்ளனர். இதனால் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த இறுதிப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்திடம் படுதோல்வி: 89 ரன்களில் சுருண்ட இந்திய அணி – 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

MUST READ