Homeசெய்திகள்விளையாட்டுகொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை? - இன்று பலப்பரீட்சை!

கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை? – இன்று பலப்பரீட்சை!

-

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 60வது லீக் போட்டியில் கொல்கத்தாvsமும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 59 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 60வது லீக் போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 60வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்திலுள்ளது. மும்பை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4 வெற்றி 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 10 முறையும் மும்பை அணி 23 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 51வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக போட்டியில் தோல்வியை தழுவிய மும்பை அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்க முயற்சிக்கும். அதே சமயம் கொல்கத்தா அணி தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

MUST READ