Homeசெய்திகள்விளையாட்டுகுஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்!

-

17வது ஐபிஎல் சீசனில் இன்று நடைபெறும் 21வது லீக் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 19 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 20 மற்றும் 21வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டு வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இன்று நடைபெறவுள்ள 21வது ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ உள்ள மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் கேஎல் ராகுல்ல் லைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் இரண்டு வெற்றி இரண்டு தோல்வி என புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 4 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் 4 போட்டிகளிலுமே குஜராத் அணி வெற்றியை பெற்றுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணி பந்துவீசவுள்ளது. லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுலும் குயின்டன் டிகாக்கும் களமிறங்கவுள்ளனர்.

MUST READ