Homeசெய்திகள்விளையாட்டுகுஜராத் அணியை வீழ்த்தி லக்னோ அணி அபாரம்!

குஜராத் அணியை வீழ்த்தி லக்னோ அணி அபாரம்!

-

 

குஜராத் அணியை வீழ்த்தி லக்னோ அணி அபாரம்!

குஜராத் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

டெல்லி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்று (ஏப்ரல் 07) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. லக்னோ அணி தரப்பில் யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகளையும், க்ருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி!

ஆட்டநாயகன் விருதை யாஷ் தாக்கூர் வென்று அசத்தினார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் புள்ளிகள் பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3-வது இடத்தில் உள்ளது.

MUST READ