spot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய குஜராத் முனைப்பு!

பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய குஜராத் முனைப்பு!

-

- Advertisement -

 

Photo: Sunrisers Hyderabad Team

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 62வது லீக் போட்டி, இன்று (மே 15) இரவு 07.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

we-r-hiring

முதலமைச்சர் தேர்வு- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். அதேபோல், ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல மீதமுள்ள மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

குஜராத் அணி 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11 போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

MUST READ