spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஅனல் பறக்கும் ஆட்டம் - ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்!

அனல் பறக்கும் ஆட்டம் – ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்!

-

- Advertisement -

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

we-r-hiring

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதலாவது தகுதி சுற்று கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் கடந்த 22ம் தேதி எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூருvsராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான்VSஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தாVSஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியானது சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 18 முறையும் ஐதராபாத் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. கடந்த குவாலிபையர் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் தோல்வியடைந்த ஐதராபாத் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று பதிலடி பெற முயற்சிக்கும். அதே சமயம் கொல்கத்தா அணி வெற்றி பெற்று 3வது முறையாக கோப்பையை கைப்பற்ற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி பந்துவீசவுள்ளது. ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட்டும் அபிஷேக் ஷர்மாவும் களமிறங்கவுள்ளனர்.

 

MUST READ