Homeசெய்திகள்விளையாட்டுஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா பஞ்சாப் அணி? - இன்று மோதல்

ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா பஞ்சாப் அணி? – இன்று மோதல்

-

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று மாலை நடைபெறும் 69வது லீக் போட்டியில் ஐதராபாத்VSபஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 68 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று 69வது லீக் போட்டி நடைபெறுகிறது. ஐதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 69வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதரபாத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 7 வெற்றி 5 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவில்லை) புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலுள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 5 வெற்றி 8 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 7 முறையும் ஐதராபாத் அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 23வது லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ஐதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கு பஞ்சாப் அணி பதிலடி கொடுக்குமா என ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

MUST READ