
காயம் காரணமாக, உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். இதையடுத்து, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவை மாற்று வீரராக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்
காயம் காரணமாக, மூன்று போட்டிகளில் விளையாடாத ஹர்திக் பாண்டியா, உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “உலகக்கோப்பைத் தொடரின் மீதமுள்ள போட்டிகளை இழக்க நேரிடும் என்ற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் இந்திய அணியுடன் இருந்து அவர்களை உற்சாகப்படுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக சோதனை!
நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுச் செய்துள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவின் விலகல், அணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனக் கூறப்படுகிறது.