
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (நவ.30) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்த் பிறந்தநாள் பரிசு ரெடி…. தலைவர் 170 முதல் தோற்றம்…
வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (நவ.30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று (நவ.30) கனமழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை (டிச.01) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் டிசம்பர் 02- ஆம் தேதி கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீண்டும் அஜர்பைஜான் பறக்கும் விடாமுயற்சி குழு…. டிசம்பர் 4-ல் அடுத்த கட்ட படப்பிடிப்பு…
டிசம்பர் 03, 04 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.” இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.