- Advertisement -
டிஜிட்டல் பரிவர்த்தனைக்குக் கட்டணம் விதிக்கும் யோசனையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். பிரதமரின் முந்தைய அறிவிப்பும் தற்போதைய மாற்றமும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“எல்லோரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள்; வங்கிகளுக்கு அலைய வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இதையொட்டித் தொடர்ந்து விளம்பரங்களும் செய்யப்பட்டு வந்தன. இதனைப் பொதுமக்கள் மீதான அக்கறை என்றே அனைவரும் கருதினோம்.”
மக்கள் நலன் புறக்கணிப்பு: பெ. சண்முகம் சாடல்
ஆனால், தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. பிரதமர் மோடி எதைச் சொன்னாலும் அதில் மக்கள் நலன் சிறிதும் இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.
எனவே, டிஜிட்டல் பரிவர்த்தனைக்குக் கட்டணம் விதிக்கப்படும் என்ற யோசனையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
