spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇமானுவேல் சேகரனின் 66வது நினைவு தினம்- உதயநிதி ஸ்டாலின் மரியாதை

இமானுவேல் சேகரனின் 66வது நினைவு தினம்- உதயநிதி ஸ்டாலின் மரியாதை

-

- Advertisement -

இமானுவேல் சேகரனின் 66வது நினைவு தினம்- உதயநிதி ஸ்டாலின் மரியாதை

தியாகி இமானுவேல் சேகரனின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரனாரின் 66 வது குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெரியகருப்பன் அமைச்சர் கயல்விழி ராமநாதபுரம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

we-r-hiring

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பில் முழு உருவ சில இடம் கூடிய மணிமண்டபம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டதாகவும் அதே போல சமூகத்தின் நிலவக்கூடிய சாதியை ஏற்றத்தாழ்வுக்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் சமத்துவம் மற்றும் சமூக நீதியை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

MUST READ