Homeசெய்திகள்தமிழ்நாடு"எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது ஆறுதல்"- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது ஆறுதல்”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

 

"எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது ஆறுதல்"- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

எதிர்க்கட்சித் தலைவர் இப்போதாவது மத்திய அரசைக் கண்டித்து பேசுகிறாரே என்பது ஆறுதல் அளிக்கிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்வதா? – டிடிவி தினகரன் கண்டனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்.15) காலை 10.00 மணிக்கு கூடிய போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ்- ன் சோகக்கதையை விவரிக்க வார்த்தை இல்லை. பா.ஜ.க. ஆளாத மாநிலங்களுக்கு புதிய திட்டங்களைக் கூட மத்திய அரசு தொடங்குவதில்லை. இரண்டு பேரிடர்களை சந்தித்த போதும் இதுவரை வெள்ள நிவாரண நிதி வழங்கப்படவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் இப்போதாவது மத்திய அரசைக் கண்டித்து பேசுகிறாரே என்பது ஆறுதல் அளித்துள்ளது. மாநிலங்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தால் கர்ப்பகிரகத்தில் சமத்துவம் நுழையத் தொடங்கிவிட்டது. கிராமப்புறங்களில் 2.50 லட்சம் வீடுகள் ரூபாய் 2,000 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

தொடர் சரிவில் தங்கம் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற எதிர்க்கட்சித் தலைவர் குரல் கொடுக்க வேண்டும். மாநில உரிமைகளில் எதிர்க்கட்சித் தலைவர் எங்களோடு இணைந்து குரல் கொடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

MUST READ