சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் 45,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வர்கிறது. கடந்த செவ்வாய் கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் 46,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.480 குறைந்து ரூ.46,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,750-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் 45,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,740-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை மட்டும் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.