
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.30) காலை 11.00 மணிக்கு சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!
அப்போது, கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் உரையாடி கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
“மழைநீர் தேங்கியது ஏன்?”- அமைச்சர்கள் விளக்கம்!
இந்நிகழ்வின்போது, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, துணை மேயர் மகேஷ் குமார், வருவாய் நிருவாக ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.