Homeசெய்திகள்தமிழ்நாடுமணிப்பூரில் அமைதி திரும்பவில்லை - கனிமொழி எம்.பி.

மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை – கனிமொழி எம்.பி.

-

மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை – கனிமொழி எம்.பி.

மணிப்பூரில் பாதுகாப்பு படைகளை வைத்துக் கொண்டு அமைதி திரும்பிவிட்டதாக கூறுவதை ஏற்கமுடியாது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

"பாதிக்கப்பட்டவர்களை என்ன கூறி தேற்றுவது என்றே தெரியவில்லை"- கனிமொழி எம்.பி. பேட்டி!

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள், இரண்டு நாள் பயணமாக மணிப்பூருக்கு சென்றனர். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும், சேதமடைந்த பகுதிகளையும் எம்.பி.க்கள் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, “மணிப்பூர் மாநிலத்தில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. மிகப்பெரிய அச்சத்துடன் மணிப்பூர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். முதலமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் தங்களை சந்திக்கவில்லை என மக்கள் கவலை அடைந்துள்ளனர். மணிப்பூரில் நிரந்தரமான அமைதி திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு படைகளை வைத்துக் கொண்டு அமைதி திரும்பிவிட்டதாக கூறுவதை ஏற்கமுடியாது. நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மணிப்பூர் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மணிப்பூர் சூழல் குறித்து நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளோம்” என்றார்.

MUST READ