
டெல்லியில் இருந்து இன்று (ஆகஸ்ட் 12) தமிழகம் வரும் ராகுல் காந்தி எம்.பி., உதகையில் தோடர் இன மக்களைச் சந்தித்து உரையாடவிருக்கிறார்.
மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்ற ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வயநாடு தொகுதி மக்களை சந்திக்கவுள்ளார்.
இதற்காக, டெல்லியில் இருந்து இன்று (ஆகஸ்ட் 12) காலை 10.00 மணிக்கு புறப்படும் ராகுல் காந்தி, தமிழகம் வழியாக கேரளாவுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல் காந்தி எம்.பி., அங்கிருந்து கார் மூலம் உதகைக்கு சென்று அங்கு தோடர் இன மக்களைச் சந்தித்து உரையாடவிருக்கிறார்.
ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவரை வெட்டிய மாணவர்கள்!
மேலும், உதகை அருகே எல்லநிலா பகுதியில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவையும் ராகுல் காந்தி சந்தித்துப் பேசுவார் எனவும் கூறப்படுகிறது. அதன் பிறகு கூடலூர் வழியாக, ராகுல் காந்தி எம்.பி. வயநாட்டிற்கு புறப்பட்டு செல்கிறார்.