ஆவின் 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் விலை ரூபாய் 10 அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
“உச்சநீதிமன்றத்தை நாடுவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
ஐந்து லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூபாய் 2 வீதம் 10 ரூபாய் உயர்ந்து, தற்போது 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 10 ரூபாய் அதிகரித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ஆவின் நிறுவனத்தின் தயிர் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்து. மேலும், 120 கிராம் தயிர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அது 100 கிராமாக குறைக்கப்பட்டது, ஆவின் பால் பொருட்களின் விலை தொடர்ந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!
ஆவின் நிறுவனத்தின் தயாரிக்கப்படும் பாதாம் மிக்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலையும், சமீபத்தில் உயர்த்தப்பட்டிருந்தது என்பது நினைவுக்கூறத்தக்கது.