spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் - முதலமைச்சர்

நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் – முதலமைச்சர்

-

- Advertisement -

நமது நாடே சமத்துவபுரமாக ஆக வேண்டும் என்பதே எனது கனவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் - முதலமைச்சர்

we-r-hiring

சென்னையில் நடைபெற்ற ” தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், தனது உரையை ”எனது அன்புக்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்” என தொடங்கினாா்.

மண்ணும் மக்களும் மாநிலம் பயன்பெற தேவையான திட்டங்களை உருவாக்கவே உங்களை அழைத்துள்ளேன். மேலும், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக மிக முக்கியமான நாளாக மார்ச் 6 ம் தேதி அமையப் போகிறது என்று குறிப்பிட்டாா்.

கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு ஒவ்வொரு துறையிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியுள்ளது என்தை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா். மேலும் சொல்ல முடியாத அளவுக்கு மலை அளவு சாதனைகளை செய்துள்ளோம் என்றும் அவர் கூறினாா்.

இந்த சாதனைகளை  சாத்தியமாக்கி அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா். 5 ஆண்டுகளில் மக்கள் அடைந்திருக்கும் மகிழ்ச்சிதான் நான் மகிழ்ச்சியாக இருக்க காரணம் என்றும் குறிப்பிட்டாா்.

ஆட்சிக்கு வரும்போது இவ்வளவு திட்டங்களை நிறைவேற்ற முடியுமா என்ற ஏக்கம் இருந்தது. ஆனால் திராவிட மால் அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டில் பயனடையாத குடும்பங்களே இல்லை.  5 ஆண்டுகளில் என்னுடைய கனவுகளில் பெரும்பாலான கனவுகளை நிறைவேற்றி விட்டேன்.

தமிழ்நாடு அரச நிறைவேற்றிய அனைத்து திட்டங்களுமே தேவையானவை, சிறப்பானவை. அரசியல், நிதி நெருக்கடிகளால் திட்டங்கள் நிறைவேற்றுவதில் நிறைய முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அனைத்து திட்டங்களுமே தேவையானவை மற்றும் சிறப்பானவை என்று தெரிவித்தாா்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக 14 முக்கிய திட்டங்களை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன் பட்டியல் பின் வருமாறு,

கிராமப்புறங்களில் கலைஞர் கணவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030க்குள் 7 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளாா். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களை கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

விவசாய வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஏக்கராக உயர்த்துவது, மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 1000 மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும் என்றும், 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உணவுப்பொருள் உற்பத்தி உயர்த்தப்படும் என அறிவித்தாா்.

கல்வித்துறையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100 % ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். ஆயிரம் மாதிரி பள்ளிகள் உருபாக்கப்படும் என முதலமைச்சர் தெரவித்துள்ளாா்.

நான் முதல்வன் திட்டம் 2.O மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்பட்டு, உலக அளவில் தமிழ்நாட்டு இளைஞர்கள் போட்டி போடும் அளவுக்கு கூடுதல் திறன் கொண்ட இளைஞர்களை உருவாக்குவோம் என்றார். மேலும் ஒவ்வொரு கல்லூரியிலும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். மேலும், அவர்கள் தொழில் தொடங்க கடன் வசதிகள் எளிமைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வீட்டுமனையற்ற ஒவ்வொரு ஆதிதிராவிடர் பழங்குடியினர் குடும்பங்களுக்கு 2030க்குள் வீட்டு மனைப் பட்டா  விழங்கப்படும் என்றம், தேவைப்படும் இடங்களில் சமூக நீதி விடுதிகள் அமைக்கப்படும் என்று கூறினாா்.

கிராமங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றும் நோக்கில் , முதல் கட்டமாக 10 ஊராட்சிகளில் தற்போதே உத்தமர் காந்தி மாதிரி கிராம திட்டம் செயல்படுத்தப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது முக்கிய இலக்காகக் கொண்டு 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க ஐடி ஏற்றுமதியை ரூ.6 லட்சம் கோடியாக உயர்த்துவது, மாவட்டம் தோறும் நவீன தொழில் பூங்காக்கள் அமைப்பது போன்ற திட்டங்களையும் அவர் அறிவித்தார். மீன்வளத் துறையில் கடல் கூண்டு மீன் வளர்ப்பு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, மீன் உற்பத்தி இரட்டிப்பாக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் கால்நடை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கால்நடைகளின் எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்தும் இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், திடக்கழிவு மேலாண்மையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார். அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்றும், நகர்ப்புறங்களில் முழுமையான மழைநீர் வடிகால் அமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், தமிழ்நாட்டின் கைத்தறி வகைகள் சர்வதேச கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கோயில் நகரங்கள், கடலோர சுற்றலா தளங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் மேம்படுத்தப்படும் என்றாா். இறுதியாக, நமது நாடே சமத்துவபுரமாக ஆக வேண்டும் என்பதே எனது கனவு. தமிழ்நாட்டு மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன். அடுத்து அமையப்போவதும் திராவிட மாடல் ஆட்சிதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளாா்.

தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! – திமுக தொண்டா்களுக்கு முதல்வர் கடிதம்

MUST READ