spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவா்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - செல்வப்பெருந்தகை

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவா்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – செல்வப்பெருந்தகை

-

- Advertisement -

சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 2 ஆம் இடத்தை பெற்ற துணைஆட்சியா் மற்றும் 7ஆம் இடத்தை பெற்ற ராஜா முகைதீன் ஆகியோருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்துகளை கூறியுள்ளாா்.சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவா்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - செல்வப்பெருந்தகை

இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில், “மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் ராஜேஸ்வரி சுவே இந்திய அளவில் 2 ஆம் இடத்தையும், ராஜா முகைதீன் அவர்கள் 7 ஆம் இடத்தையும் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

we-r-hiring

துணை ஆட்சியராக கடினமான பணிச்சூழலுக்கிடையிலும் விடாமுயற்சியுடன் படித்து இந்திய அளவில் 2 ஆம் இடத்தைப் பெற்றிருப்பது தமிழ்நாட்டிற்கு மிகுந்த பெருமையாகும். இவர்களின் இந்த சாதனை, இளைஞர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும். எதிர்காலத்தில் மேலும் பல உயரிய சாதனைகள் படைத்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்ற தமிழ்நாடு மாணவி – யு.பி.எஸ்.சி. தேர்வில் 2ம் இடம்

MUST READ