Homeசெய்திகள்தமிழ்நாடுஜனநாயகன் திரைப்படமே முக்கியம்: விஜய்யின் நடிப்பைக் கண்டு கதறி அழுத நிர்வாகிகள் – ஆதவன் நக்கல்...

ஜனநாயகன் திரைப்படமே முக்கியம்: விஜய்யின் நடிப்பைக் கண்டு கதறி அழுத நிர்வாகிகள் – ஆதவன் நக்கல் பேச்சு!

-

- Advertisement -

நாட்டில் என்ன நடந்தாலும் அது முக்கியமில்லை, ‘ஜனநாயகன்’ திரைப்படம் தான் முக்கியம் என்று விஜய் டிவி புகழ் ஆதவன் நகைச்சுவையாகவும் நக்கலாகவும் பேசியுள்ளார்.

ஆதவன்

we-r-hiring

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், “நாட்டில் எவ்வளவோ சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பற்றியே அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் அமைச்சர் ஒருவர் அழுததைப் பற்றி பலரும் பேசி வருகிறார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால், அமைச்சர் அழவில்லை; அவர்களுடைய தலைவரின் அபாரமான நடிப்பை நினைத்துப் பார்த்து தான் கதறி அழுது இருக்கிறார்கள்” என்று நகைச்சுவை பாணியில் விமர்சித்துள்ளார்.

ஆதவனின் இந்த நக்கல் பேச்சு மற்றும் கிண்டலான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் சிரிப்பலைகளையும் ஏற்படுத்தி வருகிறது.

“மாணவர்கள் முட்டிபோட்டு கதறுவதை பார்த்ததும் தூக்கமே வரவில்லை; ஜூலை 20 சம்பவங்களை நினைத்தால் பொறுக்க முடியவில்லை!” – நடிகை ரேவதி உருக்கம்!

MUST READ