Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

-

- Advertisement -

தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் காவல் மரணங்கள் குறித்து மாநில முதல்வர் விஜய்யை நோக்கி திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இத்தகைய உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் மெளனம் காத்து வரும் விஜய்யின் அணுகுமுறைக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

“தொடரும் காவல் மரணங்கள்: முதல்வர் வாயைத் திறப்பது எப்போது?”
மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், காவல் நிலையங்களில் நடைபெறும் மரணங்கள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி வருவதாகவும் குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின், “தொடர் காவல் மரணங்கள் குறித்து முதல்வர் விஜய் எப்போதுதான் வாயைத் திறப்பார்?” என வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.

 எதிர்க்கட்சித் தலைவராகக் கேட்ட வீராவேசம் எங்கே?
முந்தைய ஆட்சிக் காலங்களில் நடைபெற்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டி தற்போதைய முதலமைச்சரின் இரட்டை நிலையை மு.க.ஸ்டாலின் கடுமையாக விவரித்தார்,  “எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில், ‘சம்பவத்திற்கு வெறும் சாரி (Sorry) சொன்னால் போதுமா?’ என்று என்னைப் பார்த்து வீராவேசமாக கேள்வி கேட்டவர் விஜய். ஆனால், இன்று ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு, ஒரு இரங்கல் செய்தி அனுப்பவோ அல்லது முறையான விசாரணைக்கு உத்தரவிடவோ துணிவின்றி எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்?”என  மு.க.ஸ்டாலின் (திமுக தலைவர்) கேள்வி எழுப்பியுள்ளாா்.

எதிர்கொள்ளும் அரசியல் விமரிசனங்கள்
மாநிலத்தில் அதிகரித்து வரும் காவல் துறை அத்துமீறல்கள் மற்றும் அது தொடர்பான அரசின் மெத்தனப் போக்கு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரலெழுப்பி வரும் நிலையில், திமுக தலைவரின் இந்த நேரடித் தாக்குதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ‘முதலில் பாடப்படுவதை உறுதி செய்க!’ – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

MUST READ