Homeசெய்திகள்தமிழ்நாடுபணி வழங்கக்கோரி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

பணி வழங்கக்கோரி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

-

2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், பணி வழங்கக்கோரி நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில்(டி.பி.ஐ) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர், கட்டுப்பாடுகளை மீறி சென்ற 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், பணி வழங்கக்கோரி நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில்(டி.பி.ஐ) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர், கட்டுப்பாடுகளை மீறி சென்ற 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது வேலை வாய்ப்பு அலுவலக முன்னுரிமை அடிப்படையில் B.Ed. பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை வழங்கியிருந்தது. தொடர்ந்து அதிமுக ஆட்சியில் டெட் தேர்வுகள்  மூலம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அந்த வகையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட் 9176 நபர்கள் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில் காலி பணியிடம் பதிவு மூப்பு அடிப்படையில் நிலுவையில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும், NCTE விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால், அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் ஆசிரியர் தகுதித்தேர்வு விலக்கு என்ற அறிக்கை பின்பற்ற வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட் 9176 நபர்கள் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில் காலி பணியிடம் பதிவு மூப்பு அடிப்படையில் நிலுவையில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும், NCTE விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால், அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் ஆசிரியர் தகுதித்தேர்வு விலக்கு என்ற அறிக்கை பின்பற்ற வேண்டும்.
பணிக்கு தேர்வு

LNCTE CLAUSE V விதிப்படி டெட் பொருந்தாது என்று அறிக்கை பின்பற்றி சென்னை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பின்பற்றி வேலை கொடுக்க வேண்டும். NCTE NORMS மற்றும் நீதிமன்றம் உத்தரவு மூலம் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கலைஞர் அறிக்கை வெளியிட்டுள்ளதையும் முன்வைத்து டி.பி.ஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அரசாணை எண் 153 ல் உள்ள 1743 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதாகவும்,  2010 அறிவிப்பாணையின்படி உடனடியாக இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும்  மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸாரின் உத்தரவுகளை மீறி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

MUST READ