spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாரைக்குடியில் கணவர் வீட்டு முன் 8 வயது பெண் குழந்தையுடன்  தாய் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

காரைக்குடியில் கணவர் வீட்டு முன் 8 வயது பெண் குழந்தையுடன்  தாய் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

-

- Advertisement -

காரைக்குடியில் கணவர் வீட்டு முன் 8 வயது பெண் குழந்தையுடன் தன்னை வீட்டில் சேர்த்துக் கொள்ளும்படி தர்ணாவில் ஈடுபட்டுள்ள பெண்ணால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

we-r-hiring

கடந்த 2015 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் வினோதினி – ரத்தின செல்வம் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினர் சென்னையில வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த நிலையில். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது , இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால்,ரத்தினம் விவகாரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்இது குறித்து பேச்சுவார்தையும் நடந்துள்ளது இதனிடையே வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் சேர்ந்து வாழ உத்தரவிட்டதற்கும் ரத்தினம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜீவனாம்சமாக 10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டதையும் ரத்தினம் மதிக்காததால்,வினோதினி இன்று தன் குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்தினத்தின் தந்தை மற்றும் தாயுடன் பேச்சு நடத்தினர். இதில் ரத்தினம் குடும்பத்தினர் வினோதினியை வீட்டுக்குள் விடமாட்டோம் என காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனையடுத்து இரு தரப்பையும் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறினர்.

 

 

 

MUST READ