Homeசெய்திகள்தமிழ்நாடுதொகுதி மறுவரையறை: முதல்வர் விஜய் தலைமையில் இன்று கலைவாணர் அரங்கில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் ஆலோசனை...

தொகுதி மறுவரையறை: முதல்வர் விஜய் தலைமையில் இன்று கலைவாணர் அரங்கில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் ஆலோசனை – 37 உறுப்பினர்கள் புறக்கணிப்பு!

-

- Advertisement -
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
விஜய்
கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் விவரம்:
தமிழகத்திலிருந்து மொத்தம் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை 39, மாநிலங்களவை 18) உள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 20 எம்பிக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
கட்சிகள் வாரியாக பங்கேற்போர் விவரம்:
  • காங்கிரஸ்: 12 (மக்களவை 9, மாநிலங்களவை 3)
  • விசிக: 2 (மக்களவை)
  • சிபிஐ: 2 (மக்களவை)
  • சிபிஎம்: 2 (மக்களவை)
  • மதிமுக: 1 (மக்களவை)
  • இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML): 1 (மக்களவை)
புறக்கணிக்கும் கட்சிகள் மற்றும் விவரம்:
மறுவரையமைப்பு கூட்டத்தை திமுக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் அதிகாரப்பூர்வமாகப் புறக்கணித்துள்ளன. மொத்தமுள்ள 57 பேரில், 37 உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கணிக்கும் கட்சிகளின் விவரம்:
  • திமுக: 30 (மக்களவை 22, மாநிலங்களவை 8)
  • அதிமுக: 4 (மாநிலங்களவை மட்டும்)
  • பாமக: 1
  • மக்கள் நீதி மய்யம் (மநீம): 1
  • தேமுதிக: 1
கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், பிரதான கட்சிகள் இக்கூட்டத்தைத் தவிர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிட்கோ நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு!

 

MUST READ