spot_imgspot_imgspot_imgspot_img
HomeRewind 20252025 திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்

2025 திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்

-

- Advertisement -

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான “திராவிட மாடல்” அரசு, 2025 ஆம் ஆண்டில் தனது நான்காண்டு கால ஆட்சியை நிறைவு செய்து வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த நான்கரை ஆண்டுகளில் கல்வி, பொருளாதாரம், மகளிர் நலன் மற்றும் கட்டமைப்பு எனப் பல்வேறு துறைகளில் தமிழகம் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது.

2025 திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்​2025-இல் தமிழக அரசின் சாதனைகள்

we-r-hiring

1. பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீடுகள்
​2024-2025 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு 9.69% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டி, இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது.
இந்திய அளவில் தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
​அதேபோல், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 31 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

2. முன்னோடித் திட்டங்கள்:
2025 திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்​தமிழக அரசின் சில முக்கியத் திட்டங்கள் 2025-இல் பெரும் வெற்றியையும், வரவேற்பையும் பெற்றுள்ளன. அதில் குறிப்பாக , ​கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மிகுந்த வரவெற்பை பெற்ற திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம், தகுதியுள்ள கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 2025-இல் இதன் பயனாளிகள் எண்ணிக்கை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

2025 திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்​முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 18 லட்சம் குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
​புதுமைப் பெண் & தமிழ்ப் புதல்வன் திட்டம்: உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதன் மூலம் உயர்கல்வி சேர்க்கை அதிகரித்துள்ளது.

​3. கல்வி மற்றும் விளையாட்டுத் துறைச் சாதனைகள்
​இல்லம் தேடி கல்வி திட்டத்​இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் சுமார் 96 லட்சம் மாணவர்கள் 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்று வருகின்றனர்.

​அதேபோல் 2025 செப்டம்பரில் தொடங்கப்பட்ட அன்புக் கரங்கள் திட்டம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை கல்விக்கான நிதி உதவியை வழங்குகிறது.

முதலமைச்சர் கோப்பை 2025: மாநில அளவில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க நடத்தப்பட்ட இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பல கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

4. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்​காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக ​ 4,000 ஆசிரியர்களுக்கு காலநிலைக் கல்வி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு, பள்ளிகளில் சுற்றுச்சூழல் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பசுமைப் போக்குவரத்து: சுர்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக தமிழகத்தில் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 45 குளிர்சாதன வசதி கொண்ட மற்றும் 80 சாதாரண பேருந்துகள் என மொத்தம் 125 தாழ்தள மின்சார பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டது. 2025 இறுதியில் மேலும் 600 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

கூலிங் ரூஃபிங் (Cool Roofing): வெப்பத்தைக் குறைக்க 297 பசுமைப் பள்ளிகளில் வெள்ளை நிற வெப்பப் பிரதிபலிப்புப் பூச்சுகள் பூசும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

​5. நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை
 ​கோயில் நிலங்கள் மீட்பு​கோயில் நிலங்கள் மீட்பு: கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 6,792 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

2,226-க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழக்கு நடத்தப்பட்டு, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

கோயில்களில் குடமுழக்கு​”எல்லோருக்கும் எல்லாம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், சமூக நீதியையும் பொருளாதார வளர்ச்சியையும் இணைத்துச் செயல்படும் தமிழக அரசின் பணிகள் 2025-இல் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கித் தமிழ்நாடு முன்னேறி வருகிறது.

MUST READ