Homeதொழில்நுட்பம்ஏஐ வீடியோவை எளிதில் கண்டுபிடிக்கலாம்.. வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி!

ஏஐ வீடியோவை எளிதில் கண்டுபிடிக்கலாம்.. வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி!

-

- Advertisement -

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏஐ மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு புகைப்படம் அல்லது வீடியோ உண்மையானதா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிவது பயனர்களுக்கு சவாலாக உள்ளது.

we-r-hiring

இந்த நிலையில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட உள்ளடக்கத்தை பயனர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் வாட்ஸ்அப் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி வருகிறது.

வாட்ஸ்அப்பில் ‘ஏ.ஐ. கன்டென்ட் லேபிள்’

வாட்ஸ்அப் சேனல்களில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது ஏற்கனவே உள்ள உள்ளடக்கம் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டதா என்பதை தெரிவிக்கும் வகையில் ‘ஏ.ஐ. கன்டென்ட் லேபிள்’ என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு சோதனைப் பதிப்பில் குறிப்பிட்ட பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஐபோன் பயனர்களுக்கான சோதனைப் பதிப்பிலும் இந்த வசதி குறிப்பிட்ட சில பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சேனல் நிர்வாகிகளுக்கு புதிய வசதி

இந்த வசதி கிடைக்கும் வாட்ஸ்அப் சேனல் நிர்வாகிகள், தாங்கள் பதிவிடும் புகைப்படம் அல்லது வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருந்தாலோ அல்லது மாற்றப்பட்டிருந்தாலோ அதற்கான ‘ஏ.ஐ. கன்டென்ட் லேபிளை’ சேர்க்க முடியும்.

ஒருமுறை இந்த லேபிளை உறுதி செய்து சேர்த்துவிட்டால், பின்னர் அதை நீக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த சேனலில் பகிரப்படும் குறிப்பிட்ட உள்ளடக்கம் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது அல்லது மாற்றப்பட்டது என்பதை பின்தொடர்பவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

அனைவருக்கும் எப்போது கிடைக்கும்?

தற்போது இந்த வசதி சோதனை அடிப்படையில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இந்த வசதி எப்போது கிடைக்கும் என்பது குறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

படிப்படியாக இந்த வசதி அதிகமான பயனர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஐ உள்ளடக்கத்தை அடையாளம் காண உதவும்

ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகரித்து வரும் நிலையில், அவை ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை வெளிப்படையாக தெரிவிக்கும் இந்த லேபிள் பயனர்களுக்கு தகவல் அடிப்படையிலான புரிதலை வழங்கும்.

மேலும், சில நாடுகளில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை அடையாளப்படுத்துவது தொடர்பான சட்ட விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், அந்த விதிமுறைகளுக்கு ஏற்ப சேனல் நிர்வாகிகளுக்கு வாட்ஸ்அப் அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறது.

MUST READ