Homeசெய்திகள்சினிமாஅஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எப்போது?

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எப்போது?

-

- Advertisement -

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எப்போது?அனிருத்தின் இசையிலும் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி ஓராண்டை கடந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவு பெறவில்லை. அதாவது தற்போது வரை 90% படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே நடிகர் அஜித் அஜர்பைஜானில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார். அடுத்ததாக பத்து நாட்களுக்கான படப்பிடிப்பிற்காக விடாமுயற்சி படக்குழு ஐதராபாத் செல்ல உள்ளது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இருப்பினும் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்ற வருத்தம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எப்போது?அதேசமயம் படக்குழுவும் படத்தை எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விடாமுயற்சியுடன் போராடி வருகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அஜித் ரசிகர்களை சற்று பெருமூச்சு விட வைத்துள்ளது. இருப்பினும் விடாமுயற்சி திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ