தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமாக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்திற்கு பிறகு இவர் இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படம் பிரதீப் ரங்கநாதனை இந்திய அளவில் பிரபலமாக்கியது. மேலும் இவர் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக்கி வரும் டிராகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் நானும் ரௌடி தான் திரைப்படத்தின் மூலம் பிரபலமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் பிரதீப். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த படப்பிடிப்பு விரைவில் முழுவதும் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே எல்ஐசி (LIC)என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என எல்ஐசி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியதால் தற்போது படத்தின் தலைப்பு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி (ஜூலை 25) இன்று பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் புதிய தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதாவது இந்த படத்திற்கு எல்ஐகே என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -