spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்த.வெ.க மாநாட்டில் தொண்டர்கள் வழங்கிய கட்சி துண்டை அணிந்த விஜய்

த.வெ.க மாநாட்டில் தொண்டர்கள் வழங்கிய கட்சி துண்டை அணிந்த விஜய்

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் தொண்டர்கள் வீசிய கட்சி துண்டினை தலைவர் விஜய் நெகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டார்.

we-r-hiring

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்திறகு சரியாக 4 மணி அளவில் தலைவர் விஜய் வருகை தந்தார். அப்போது தொண்டர்கள் அவருக்கு கரவொலி எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து, மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்டு உள்ள  நீண்ட மேடையில் விஜய் ராம்ப் வாக் நடைபோட்டு தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றார். அப்போது, தொண்டர்கள் வீசிய கட்சி துண்டினை அணி அவர்களுடைய வாழ்த்தினை ஏற்றுக் கொண்டார். மாநாட்டில் கூடியிருந்த தொண்டர்களின் வரவேற்பினை கண்டு விஜய் நெகிழ்ச்சியில் கண் கலங்கினார்.

 

MUST READ