Homeசெய்திகள்தமிழ்நாடுதாராபுரம் இடைத்தேர்தல்: இடதுசாரி கூட்டணி சார்பில் லட்சுமணன் வேட்பாளர் அறிவிப்பு - அறிமுகக் கூட்டத்தில் எம்.பி....

தாராபுரம் இடைத்தேர்தல்: இடதுசாரி கூட்டணி சார்பில் லட்சுமணன் வேட்பாளர் அறிவிப்பு – அறிமுகக் கூட்டத்தில் எம்.பி. சுப்பராயன் பேச்சு

-

- Advertisement -

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கூட்டணிக் கட்சிகள் சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக லட்சுமணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.தாராபுரம் இடைத்தேர்தல்: இடதுசாரி கூட்டணி சார்பில் லட்சுமணன் வேட்பாளர் அறிவிப்பு - அறிமுகக் கூட்டத்தில் எம்.பி. சுப்பராயன் பேச்சு

வேட்புமனு தாக்கல் ஏற்கப்பட்டதை அடுத்து, தாராபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

we-r-hiring

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவருமான கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முக்கிய நிர்வாகிகளும் மாவட்ட கிளைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இலவச வீட்டு மனைப் பட்டா விவகாரம்
கூட்டத்தில் உரையாற்றிய எம்பி சுப்பராயன், பொது மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் பேரளவில் மட்டுமே உள்ளதாகவும், இதுவரை நிலம் அளவீடு செய்து வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தற்போதைய முதல்வரிடமும் மனு அளித்ததாகவும், ஆனால் அவர் லண்டன் சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த தேர்தலில் விசில் ஊதிவிட்டார்கள், குழந்தைகள் சொன்னதைக் கேட்டு ஓட்டு போட்டுவிட்டார்கள்.

ஆனால், இந்த முறை பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று நிலைமையை விளக்கிப் பேசி வாக்குகளைப் பெற வேண்டும்.

பண மூட்டைகளை வைத்துக்கொண்டு சிலர் காத்திருக்கிறார்கள், எனவே பகுதிவாரியாக சென்று மக்களிடம் பேசி ஓட்டுக்களை சேகரிக்க வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி சுப்பராயன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இடதுசாரி கட்சிகள் இணைந்து ஒரு அணியை கட்டமைக்கும் அரசியல் தேவை எழுந்துள்ளது; அதற்காகவே இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான கொள்கைகள் உரிய காலத்தில் வெளியிடப்படும்.

இது விவசாயத்தைச் சார்ந்த ஒரு தொகுதியாகும். 1952-க்குப் பிறகு இங்கு கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது இல்லை; பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது கம்யூனிஸ்ட் போட்டியிட்ட நிலையில், சட்டமன்றத் தொகுதியில் கம்யூனிஸ்ட் போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும்.

ஊழல் முறைகேடுகளுக்கு இடமில்லாத, கட்சிப் பாகுபாடின்றி தீர்வு காணக்கூடிய மெய்யான மக்கள் பிரதிநிதியாக நமது வேட்பாளர் செயல்படுவார்.

அமராவதி ஆற்றின் பிரச்சனையை விரைவாகத் தீர்க்காவிட்டால் விவசாயம் பொய்த்துப்போகும் நிலை ஏற்படும்; குடிநீர் பிரச்சனையையும் உடனடியாகத் தீர்க்க வேண்டும். எங்களை மக்கள் எப்போதும் அணுக முடியும்.

திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் பேட்டி:
இந்நிகழ்வில் திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் பேசுகையில், “இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட ஒன்று, இதற்கு காரணமானவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

கண்வலிக்கிழங்கு விதை விலை நிர்ணயம், உப்பாறு அணைப் பிரச்சனை, பாசன வசதிப் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இவற்றைத் தீர்க்க மக்கள் களப்பணியாற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்.

எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்ற திமுகவின் முகத்திரையை கிழிக்கும் தேர்தலாக இது அமையும் என்றார்.
மேலும் பேசிய அவர், “மூன்று கட்சித் தலைவர்கள் இங்கே வருவார்கள்; திமுகவின் மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்தாலும், எடப்பாடி முதல்வர் என்ற கோரிக்கையை நாங்கள் புறக்கணித்தோம்.

கவர்னர் ஆட்சியைத் தவிர்க்கவே தவெக ஆட்சிக்கு ஆதரவு வழங்கி வருகிறோம். தவெக வேட்பாளரையும் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்காகும்.

இது இடதுசாரிக்குச் சாதகமான தேர்தலாக அமையும் எனத் தெரிவித்தார்.

அரசியல் சூழல் எப்போது மாறுபடும் – சுப்பராயன் விமர்சனம்:
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த எம்பி சுப்பராயன், அரசியல் சூழல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் என்றார்.

குறுகிய கால தவெக அரசின் செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை எனவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசை எதிர்ப்பதில் தவெக தயக்கம் காட்டுவதாகவும், பல்கலைக்கழக விவகாரம் மற்றும் தனியார் மயமாக்கலில் ஆர்வம் காட்டப்படுவதாகவும் அவர் கூறினார்.

லஞ்சத்தை ஒழிப்போம் என்பவர்கள் அதனை ஒழித்தால் நல்லது என்றும், சில முறைகேடுகளைப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தி வருவதாகவும் தெரிவித்த அவர், தவெக அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றார்.

எதிர்த்துப் போட்டியிடுவதிலேயே அரசுக்கு ஆதரவு இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி: ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாரதிதாசன் தனது ரூ. 3 லட்சம் மாதாந்திர மதிப்பூதியத்தை மறுத்து அரசுக்கு கோரிக்கை!

MUST READ