spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமணிகண்டனின் 'குடும்பஸ்தன்' படத்திலிருந்து முதல் பாடல் வெளியீடு!

மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’ படத்திலிருந்து முதல் பாடல் வெளியீடு!

-

- Advertisement -

மணிகண்டன் நடிக்கும் குடும்பஸ்தன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்'.... இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

நடிகர் மணிகண்டன் ஆரம்பத்தில் விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் டிஜே ஞானவேல் இயக்கியிருந்த ஜெய் பீம் திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் மணிகண்டன் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே வெளியான குட் நைட், லவ்வர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும் நடிகர் மணிகண்டன் குடும்பஸ்தன் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை நக்கலைட்ஸ் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியுள்ளார். சினிமாக்காரன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க வைஷாக் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சுஜித் என் சுப்பிரமணியம் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

we-r-hiring

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து ஜீரோ பேலன்ஸ் ஹீரோ எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ள நிலையில் வைஷாக் இப்பாடல்வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ