spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்.... ஷூட்டிங் எப்போது?

அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்…. ஷூட்டிங் எப்போது?

-

- Advertisement -

அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மொழியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்.... ஷூட்டிங் எப்போது? அந்த வகையில் கடைசியாக ஜவான் திரைப்படத்தை இயக்கியிருந்த அட்லீ தற்போது பேபி ஜான் எனும் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்காக படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்தான் இயக்குனர் அட்லீ சமீபத்தில் விஜய் சேதுபதியின் புதிய படத்தை தான் தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி இந்த படமானது ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தினை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்.... ஷூட்டிங் எப்போது?மேலும் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஜனவரி மாதத்தில் தொடங்கும் என புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

we-r-hiring

நடிகர் விஜய் சேதுபதி தற்போது விடுதலை 2, ஏஸ், ட்ரெயின், காந்தி டாக்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ