spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிம்பு குரலில் 'தில்லுபரு ஆஜா'.... 'டீசல்' படத்தின் 2வது பாடல் குறித்து அறிவிப்பு!

சிம்பு குரலில் ‘தில்லுபரு ஆஜா’…. ‘டீசல்’ படத்தின் 2வது பாடல் குறித்து அறிவிப்பு!

-

- Advertisement -

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் டீசல் படத்தின் இரண்டாவது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.சிம்பு குரலில் 'தில்லுபரு ஆஜா'.... 'டீசல்' படத்தின் 2வது பாடல் குறித்து அறிவிப்பு!

நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் பொறியாளன், பியார் பிரேமா காதல், தாராள பிரபு, ஓ மனப்பெண்ணே ஆகிய வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய படங்கள் ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஹரிஷ் கல்யாண் டீசல் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தெர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் எஸ் பி சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க சண்முக முத்துசாமி படத்தினை இயக்கி இருக்கிறார். திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் இந்த படம் இந்த வருடம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

we-r-hiring

அதாவது ஏற்கனவே இப்படத்திலிருந்து ‘நங்கூரமா இறங்குற’ எனும் பாடல் வெளியாகி இன்று வரையிலும் இணையத்தை கலக்கி வருகிறது. இதைத்தொடர்ந்து சிம்பு குரலில் உருவாகியுள்ள தில்லுபரு ஆஜா எனும் இரண்டாவது பாடல் வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 4.50 மணி அளவில் வெளியாகும் என படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ