spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' பட ஸ்டைலில் அஜித்தை வாழ்த்திய ரஜினி!

‘குட் பேட் அக்லி’ பட ஸ்டைலில் அஜித்தை வாழ்த்திய ரஜினி!

-

- Advertisement -

நடிகர் ரஜினி, அஜித்தை வாழ்த்தி உள்ளார்.'குட் பேட் அக்லி' பட ஸ்டைலில் அஜித்தை வாழ்த்திய ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து 2025 ஏப்ரல் 14ஆம் தேதி இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படம் வெளியாக உள்ளது. அடுத்தது ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி இருக்கும் நிலையில், விரைவில் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். அதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு சென்ற ரஜினியிடம், செய்தியாளர்கள் குட் பேட் அக்லி படம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினி, “இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். (காட் பிளஸ் யூ )-God Bless U என்று (குட் பேட் அக்லி) – Good Bad Ugly பட ஸ்டைலில் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

we-r-hiring

'குட் பேட் அக்லி' பட ஸ்டைலில் அஜித்தை வாழ்த்திய ரஜினி!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று (ஏப்ரல் 10) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ