Homeசெய்திகள்சினிமாபணம் கட்டியாச்சு, ப்ளூ டிக் எங்க போச்சு... கடுப்பான அமிதாப் பச்சன்!

பணம் கட்டியாச்சு, ப்ளூ டிக் எங்க போச்சு… கடுப்பான அமிதாப் பச்சன்!

-

- Advertisement -

ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கத்தால் அவதிப்பட்ட அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய எலான்‌ மஸ்க்‌ தடாலடியாக பல மாற்றங்களை செய்து வருகிறார். அதில் முக்கியமானது ப்ளூ டிக் வேண்டுமென்றால் காசு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ப்ளு டிக் கிடையாது என்று அறிவித்தார். அதன்படி பிரபலங்கள் அனைவர்க்கும் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

Amitabh Bachchan: A struggler, a megastar, an icon
இதனால்‌ கடுப்பான பிரபலங்கள் பலரும் ட்விட்டரை விட்டு வெளியேறி வருகின்றனர். பாலிவுட் பிரபலமான அமிதாப் பச்சனின் ப்ளு டிக்கும் நீக்கப்பட்டது.

இதுகுறித்து பதிவிட்ட அவர் “ஹே ட்விட்டர், நான் ப்ளூ டிக் சந்தா பணம் செலுத்திவிட்டேன். எனவே, தயவுசெய்து எனது பெயருக்கு பின்னால் உள்ள ப்ளூ டிக்கை வைக்கவும். அப்போது தான் மக்களுக்கு நான் தான் அமிதாப் பச்சன் என்று தெரியும். அதற்காக நான் உங்களை வணங்கி கேட்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

பின்னர் அவர் கணக்கிற்கு மீண்டும் ப்ளூ டிக் வந்தது. அதையடுத்து மீண்டும் பதிவிட்ட அமிதாப் பச்சன் “சகோதரர் மஸ்க், மிக்க நன்றி. என் பெயருக்கு பின்னால் நீலநிற குறியீடு மீண்டும் வந்துவிட்டது.” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ