Homeசெய்திகள்அரசியல்ஆதவ் அர்ஜூனா கார் மோதி காவலர் ஒருவர் கால் முறிவு

ஆதவ் அர்ஜூனா கார் மோதி காவலர் ஒருவர் கால் முறிவு

-

- Advertisement -

திருச்சியில் தவெக தலைவர் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரமும் செய்தார். அந்த நிகழ்ச்சிக்கு சென்ற ஆதவ் அர்ஜூனாவின் கார் மோதி காவலர் ஒருவரின் கால் முறிந்தது.ஆதவ் அர்ஜூனா கார் மோதி காவலர் ஒருவர் கால் முறிவு தவெக தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என்று இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் செய்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு சென்ற தவெகவின் தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் கார் எதிர்பாராதவிதமாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சதீஷின் மீது மோதியதில் அவரது கால் எலும்பு முறிந்தது. இதில் அந்த காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, கால் முறிவு ஏற்பட்டது.​ விபத்து நடந்தவுடனேயே காயமடைந்த காவலரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா மருத்துவமனைக்கு சென்று நலம் விசாாித்து வருகின்றாா்.

we-r-hiring

​இந்த விபத்து தொடர்பாக திருச்சி மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக பொதுக்கூட்டம், பிரச்சாரம் என்றாலே விபத்து நடப்பது தவிர்க்க முடியாமலாகிறது.

த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கில் வேட்புமனுத் தாக்கல்; பிரம்மாண்ட ரோடு ஷோ (Roadshow)

 

MUST READ