அதிக வெப்பநிலையிலும் பாதுகாப்பாக செயல்படக்கூடிய புதிய வகை பேட்டரியை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.


சீனாவின் புகழ்பெற்ற Tsinghua பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 150 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கி செயல்படும் மிகச்சிறிய “All-Ceramic Lithium-Iron” பேட்டரியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
இந்த பேட்டரியின் முக்கிய சிறப்பு, இதில் பயன்படுத்தப்பட்டுள்ள Solid Ceramic Electrolyte தொழில்நுட்பமாகும். வழக்கமான லித்தியம்-அயன் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் திரவ எலக்ட்ரோலைட்டுகளுக்கு பதிலாக செராமிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், தீப்பற்றும் அபாயம் மிகவும் குறைகிறது. ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி, இந்த பேட்டரி 150°C வரை தொடர்ந்து செயல்படுவதோடு, திடீரென ஏற்படும் 300°C வரை வெப்பநிலையையும் சுமார் 20 வினாடிகள் வரை தாங்கி பாதுகாப்பாக இருக்கும் திறன் கொண்டதாகும்.
பாதுகாப்பு, நீடித்த செயல்திறன் மற்றும் அதிக வெப்பநிலையை சமாளிக்கும் திறன் ஆகியவற்றால், இந்த புதிய தொழில்நுட்பம் மின்சார வாகனங்கள், விண்வெளி ஆய்வுகள், தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் உயர் வெப்பநிலை சூழல்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு, எதிர்கால பேட்டரி தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு
