Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் சாமி தரிசனம்!

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் சாமி தரிசனம்!

-

- Advertisement -

தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாகப் பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வால், சென்னை திருவொற்றியூரில் உள்ள பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் சாமி தரிசனம்!​கடந்த 2021-ஆம் ஆண்டில் சென்னை மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றிய மகேஷ் குமார் அகர்வாலுக்கு, கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தமிழகத்தின் புதிய டிஜிபியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

​டிஜிபியாகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ‘பூலோக கைலாயம்’ என்று ஆன்மீகப் பெருமையுடன் அழைக்கப்படும் வரலாற்றுப் பழமை வாய்ந்த திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோவிலுக்குத் தனது மனைவியுடன் அவர் வருகை தந்தார். கோவிலில் உள்ள வடிவுடையம்மன், ஆதிபுரீஸ்வரர் மற்றும் திருவொற்றீஸ்வரர் சன்னதிகளுக்குச் சென்ற டிஜிபி, அங்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகளில் கலந்துகொண்டார்.

we-r-hiring

​சுமார் இரண்டு மணி நேரம் கோவிலில் தங்கியிருந்த டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சன்னதிகளில் மனம் உருகி சாமி தரிசனம் செய்து வழிபட்டார். டிஜிபியின் வருகையையொட்டி கோவில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தம்பி குடும்பத்தைத் தாக்கிய வழக்கு: புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக உத்தரவு

MUST READ