டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.


சிறுவனின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு
டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் சிறுவன் ஒருவன் கலந்துகொண்டு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினான். அந்த சிறுவன் பேசுகையில், “போலீசாரின் லத்திக்கோ அல்லது அவர்களின் தடியடிக்கோ நான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை. நாட்டின் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் பகத் சிங்கைப் போல நானும் இந்த நாட்டிற்குச் சேவை செய்யவே விரும்புகிறேன்!” என அச்சிறுவன் பேசியுள்ளான்.
இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரித்திகா
அச்சமின்றிப் பேசிய அந்தச் சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அதனை ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மாணவர் போராட்டத்திற்குத் தனது ஆதரவைப் பதிவு செய்துள்ளார். பிரபல முன்னணி கிரிக்கெட் வீரரின் மனைவி, டெல்லி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகப் பதிவு வெளியிட்டிருப்பது இணையதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளதுடன், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கண்ணீருடன் வெளியேறிய லயோனல் மெஸ்சி: அர்ஜென்டினா ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்திய இறுதிப் போட்டி!
