Homeசெய்திகள்உலகம்சர்வதேச அரசியல் களம்: இஸ்ரேல் - ஈரான் மோதலும், அமெரிக்காவின் புதிய வியூகமும்!

சர்வதேச அரசியல் களம்: இஸ்ரேல் – ஈரான் மோதலும், அமெரிக்காவின் புதிய வியூகமும்!

-

- Advertisement -

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நேரடி ஆதரவுடன் ஈரான் மீது செப்டம்பர் மாதத்திற்குள் மிகப் பெரிய தாக்குதலை நடத்த இஸ்ரேல் தீவிரத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான்

we-r-hiring

அமெரிக்காவின் நிதியுதவியும், நெதன்யாகுவின் வாஷிங்டன் பயணமும்:

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி-க்குச் சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அங்குள்ள பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

இஸ்ரேலுக்கு நிதியுதவி வழங்குவதற்கு அமெரிக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக 1.3 ட்ரில்லியன் டாலர் மற்றும் 3.5 பில்லியன் டாலர் உடனடி நிதி ஒதுக்கீட்டுக்கான ஒப்புதலை அமெரிக்க செனட் சபை வழங்கியுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தின் போர்க்குற்றச்சாட்டும், சவால்களும்:

சர்வதேச நீதிமன்றம் நெதன்யாகுவை போர்க்குற்றவாளியாக அறிவித்து பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், அதனைப் பொருட்படுத்தாமல் நெதன்யாகு சவால் விடுத்துள்ளார்.

மேலும், “தான் ஒருவேளை போர்க்குற்றவாளி என்றால், தன்னுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவும் போர்க்குற்றவாளிதானா?” என்ற கேள்வியை எழுப்பி அமெரிக்காவையும் இந்த விவகாரத்தில் கோர்த்துவிட்டுள்ளார். இதற்கிடையில், நியூயார்க் நகருக்கு நெதன்யாகு வந்தால் அவரை கைது செய்யப் போவதாக நியூயார்க் மேயர் மம்தானி விடுத்துள்ள எச்சரிக்கை விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

பிரிட்டனின் ஆட்சி மாற்றமும், ஈரான் எச்சரிக்கையும்:

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்குத் தடையாக இருந்த பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் மாற்றப்பட்டு, புதிய பிரதமர் பதவியேற்றுள்ளார். இதன் மூலம் பிரிட்டனின் ராணுவத் தளங்களை அரபு நாடுகளில் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பிரிட்டன் இந்த மோதலில் நேரடியாகத் தலையிட்டால் அதற்கான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்தத் தொடர் மோதல்களால் உலகளாவிய பொருளாதாரத்திலும், கச்சா எண்ணெய் விலையிலும் கடுமையான தாக்கம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வி உரிமையும், மாணவர்களின் எழுச்சியும்: நீட் தேர்வுக்கு எதிரான ‘ஆசாதி’ முழக்கம் ஒரு பார்வை!

MUST READ